Tuesday, 14 June 2011

சரக்கு செய்த லீலை

திண்டுக்கல் அருகில் உள்ளது எங்களது கிராமம். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது.. என்னுடைய நண்பர்கள் குழுவாக ஒரு நாள் மது அருந்தினர்.மது அருந்திவிட்டு எல்லாரும் ஒன்றாக சீட்டு விளையாடினர்.எங்கள் ஊரில் இரவு பத்து மணிக்கு எப்பொழுதும் 5 நிமிடம் மின்சாரம் இருக்காது.. நண்பர்கள் சீட்டு விளையாடும் போது சரியாக 10மணி ஆனது.ஒரு நண்பன், அவன் பட்டப்பெயர் பொட்டி. அவன் மட்டும் விளையாடாமல் தூங்கிக்கொண்டு இருந்தான். சரியாக தினமும்10மணிக்கு  மின்சாரம் போகும் நேரத்தில் மின்சாரம்  போனது.. பொட்டி அப்பொழுது கண் விளித்து பார்த்தான். மின்சாரம் இல்லை. ஆனால் நண்பர்கள் அனைவரும் பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர். 


அதில் இரண்டு நண்பர்கள் எனக்கு ஜோக்கர் வந்தால் தாங்கள் ஜெயித்து விடுவதாக பேசிக்கொண்டனர்.தூங்கி முழித்த நண்பனுக்கு ஒரு பயம்.. தான் குடித்த சரக்கினால் தனக்கு கண்ணு தெரியவில்லை என்று திடீரென்று கண்ணு தெரியல, கண்ணு தெரியல, கண்ணு தெரியல என்று கத்தி கூப்பாடு போட்டு விட்டான்... அவனை கரண்ட்  இல்லடா  என்று சொல்லி  புரியவைப்பதற்குள் கஷ்டமாகி விட்டது ...